உள்நாடு

துந்துவையில் நடைபெற்ற சமூக நல்லுறவு இப்தார்

பல்லினத்தன்மையை மதித்து, கொண்டாடி, சமூக நல்லுறவை வளர்க்கும் நோக்கில் காலி மாவட்டம் துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு மார்ச் 09 (திங்கட்கிழமை) திகதி துந்துவை முஸ்லிம் மகா வித்தியாத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றன.

இவ் இப்தார் வைபத்தில் மார்க்கத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஊர் மூத்தொர் சங்க உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், அபிமானிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *