சுயாதீன தொலைக்காட்சி நிலையத்தில் வருடாந்த இப்தார்
சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வசந்தம் தொலைக்காட்சி வானொலி முஸ்லிம் ஊழியர்கள் இணைந்து வருடாந்த இப்தார் நிகழ்வினை ஜ.ரீ.என் தலைவர் பிரியந்த வெதமுல்ல தலைமையில் ஜ.ரீ.என். கெம்பஸ் கூட்ட மண்டபத்தில் 17.03.2026 நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு வெளிநாட்டு பிரதியமைச்சர் அருன கேமசந்திர ,புத்தளம் பாராளுமன்ற உறுப்பிணர் எம். பைசால் ,பலஸ்தீன் நாட்டின் துாதுவராக நியமிக்கப்பட்டுள்ள பைசர் பாருக், மற்றும் பொதுமுகாமையாளர் பிரதிப் பொதுமுகாமையாளர் , மற்றும் ரம்மிய லங்கா நிறுவனர் அப்துல் ரஹ்மான் நளிமி ஜெயவர்த்தன கம ஜூம்ஆப் பள்ளிவாசல்கள் இமாம் மற்றும் பள்ளி பரிபலான சபை உறுப்பிணர்கள் ஜ.ரீ.என் தமிழ் ,பௌத்த ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர்கள் இவ் இப்தார் இராப்போசன விருந்திலும் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வசந்தம் முகாமையாளர் மொஹமட் இர்பான் மற்றும் பர்ஹான் உட்பட அனைத்து ஊழியர்கள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












(அஷ்ரப் ஏ சமத்)
