கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹுதில் பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள
கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹுத் ஜும்ஆப் பள்ளியில் இயங்கி வரும் அல் மத்றஸதுல் இஸ்லாமிய்யாவில் மாணவர் பிரியாவிடை மற்றும் முஸாபகது ரமழான் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை 9.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுக்கு மத்றஸா குழுவின் தலைவர் மெளலவி எம்.என்.எம். பைரூஸ் தலைமை தாங்கினார்.
மத்றஸா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பிரியாவிடை பெற்றுச் செல்லும் மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இங்கு மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் ஜாமிஉத் தெளஹுத் ஜும்ஆப் பள்ளித் தவைவர் அல்ஹாஜ் இஸ்மாயீல் , செயலாளர் அல்ஹாஜ் எம்.என்.எம். ஜெளஸி பொருளாளர் சப்ராஸ் சேர் உட்பட மஸ்ஜித் மற்றும் மத்றஸாவின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உஸ்தாத் முஅல்லிமாக்கள் பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது மத்றஸா மாணவர்களுக்கு பரிசில்களும் இலவச சீருடை மற்றும் புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டன. தகவல்.பள்ளிவாசல் இமாம் மெளலவி இனாமுல்லாஹ் (சலபி).








