உள்நாடு

புத்தளத்தில் இடம்பெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், இவ் வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்ற ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வின் கீழ், புத்தளம் நகரப் பகுதிகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மஸ்ஜித்களில் ஹிஸ்புல் குர்ஆன் ஓதல் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 3,900 மாணவர்கள் ஹிஸ்புல் குர்ஆன் ஓதி பயன் பெற்றுள்ளனர் இவ் அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வை சிறப்பாக வழிநடத்திய ஆலிம்களுக்கு ஊக்குவிப்பு நன்கொடைகளும் வழங்கி வைக்கப்பட்டது

இந் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் காரியாலயத்தில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்றது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *