உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உறுதிப்படுத்தியுள்ளார்.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த அறிவிப்புடன், க.பொ.த சாதாரண தரத் தேர்வுத் தாள்கள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறைப் பரீட்சைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செயல்முறைத் தேர்வுகள் முடிந்தவுடன் சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளையும் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
