உள்நாடு

30 வருடங்கள் பணியாற்றிய முஅஸ்ஸினுக்கு சீனன்கோட்டையில் கெளரவம்

பேருவளை சீனன் கோட்டை நவ்பர் ஜாபிர் மாவத்தை இப்ராஹிமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக முஅஸ்ஸினாக கடமையாற்றும் முகத்தமுஷ் ஷாதுலி அல்ஹாஜ் அபுல் ஹஸன் அவர்கலின் சேவைகளை கௌரவித்து பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கும் வைபவம் புனித ரமலான் மாத கடைசி தினத்தில் மேற்படி ஸாவியாவில் நடைபெறும் ஹிஸ்புல் குர்ஆன் தமாம் மஜ்லிஸில் இடம்பெறும்.

மேற்படி ஸாவியா பரிபாலன கமிட்டியுடன் பிரதேச வாழ் மக்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். அன்றைய தினம் புனித ரமலான் மாம் முழுவதும் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றிய சிறார்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன் கோட்டைப் பள்ளிச்சங்க இணைச் செயலாளருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ்ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சீனன் கோட்டைப் பள்ளிச்சங்க உறுப்பினர்கள், மேற்படி ஸாவியா உபகுழு அங்கத்தவர்கள் உலமாக்கள் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொள்வர்.

(பேருவளை : பீ. எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *