லெபனான் எல்லைப் பகுதியில் ஈராக் படையினர் தாக்குதல்
ஈராக் மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஈராக்கின் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஐந்து ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் விமான நிலையப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை லெபனானின் தய்பே நகருக்கருகில் இஸ்ரேலியப் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அத்துடன், இஸ்ரேல் – லெபனான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிரியாத் ஷ்மோனா (Kiryat Shmona) மற்றும் அவிவிம் (Avivim) ஆகிய இஸ்ரேலிய நகரங்கள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
