உள்நாடு

இறை இல்லத்தை அபிவிருத்தி செய்ய உதவி கோருகின்றனர்

புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள மொஹிதீன் ஜூம்ஆ மஸ்ஜித் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வருபவர்கள் பாரிய அகௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக இப்பள்ளிவாசலை திருத்தியமைக்க வேண்டிய விடயத்தை ஊர் ஜமாத்தினர் தெரிவிப்பதோடு பள்ளிவாசல் நிருவாகமும் இதுவிடயத்தில் கவனம் செலுத்தி அதனை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளது.

நாளாந்தம் பெருமளவு மக்கள் இங்கு தொழுகைக்கு வருவதுடன் இப்பள்ளிவாசல் புத்தளம் கொழும்பு வீதியில் அமைந்துள்ளதால் அவ்வீதியூடாக பயணிப்பவர்களும் தொழுகைக்காக பயணத்தை நிறுத்தி இப்பள்ளிவாசில் தொழுகையை முடித்துக் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு இடவசதி, கழிவறை வசதிகள், நீர் வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளும் குறைபாடாக காணப்படுவதால் அவற்றை பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு அவசரமாக உள்ளது.

எனவே மேற்படிப் பள்ளிவாசலை திருத்தி புணர்நிருமானம் செய்ய தற்போதைய செலவுப்படி சுமார் நான்கு (4) கோடி ரூபா தேவைப்படுவதால் அதனை குறித்த பள்ளிவாசல் நிருவாகத்திற்கு உட்பட்ட மக்களால் ஈடு செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. காரணம் இப்பகுதி மக்கள் அன்றாடம் உழைத்து குடும்பம் நடாத்தும் வருமாணம் குறைந்த மக்களாகும். எனவே குறித்த பள்ளிவாசலை கட்டி முடிக்க தனவந்தர்கள், நன்கொடையாளர்களிடமிருந்தும் பள்ளிவாசல் நிருவாகம் உதவிகளை நாடி நிற்கின்றனர் அத்துடன் பணத்தை சேகரிப்பதற்கு ரூபா ஐயாயிரம் கொண்ட டிக்கட் முறையையும் செய்துள்ளனர்

எனமே மேற்படி பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ரமழானின் கடைசி பத்து நாட்கள் மிகவும் பெருமைமிக்க நாட்கள். இந்த புனித நேரத்தில் செய்யப்படும் நன்மைகள் அல்லாஹ்விடம் பல மடங்கு நன்மை பெறும்.

ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்காக வழங்கப்படும் சதகத்துல் ஜாரியா (நிறைவில்லாத நற்கொடை) என்பது மரணத்திற்குப் பிறகும் தொடரும் நன்மையாகும். அந்த பள்ளிவாசலில் தொழுகை நடக்கும் ஒவ்வொரு நேரத்திலும்இ குர்ஆன் ஓதப்படும் ஒவ்வொரு தருணத்திலும், அதில் பங்கேற்றவர்களுக்கு நன்மை கிடைப்பதுபோல, அதை கட்ட உதவியவர்களுக்கும் நன்மை தொடர்ந்து கிடைக்கும்.

இந்த வகையில் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் கீழ்வரும் பள்ளிவாசலின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறும் பள்ளிவாசல் நிருவாகம் என்ற வகையில் உங்களிடம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

Bank Details

Bank: Amanah Bank

Branch: Puttalam

Account Name: Mohideen Jumma Masjid

Account Number: 0100209207002

📞 Contact Person

F. M. Fairoos president

Mobile: 071 6 66 0532

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *