உள்நாடு

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலின் வருடாந்த இப்தார் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் தமாம் நிகழ்வு

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (Muslim Ladies Study Circle) நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு வருடாந்த இப்தார் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ் நிகழ்வுகள் நேற்றைய தினம் (15) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் கட்டிடத்திலுள்ள “ஹாஜியானி சுபைதா எம். அப்துல் கரீம் நினைவு மண்டபத்தில்” அதன் தலைவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தலைமையில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கொழும்பு 3, முஷான் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் முஸ்லிம் ஸலாஹுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கௌரவ அதிதியாகக் கொழும்பு சவூதி டிரேட்ஸ் & டிரான்ஸ்போர்ட் நிறுவனத் தலைவர் அல்ஹாஜ் M.A.M. அஷ்ரப் பங்கேற்றார்.

மேலும் சிறப்பு அதிதிகளாக அல்ஹாஜ் A.M.J.M. ஜவ்பர் (முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்), அல்ஹாஜ் A.R. முத்தஸிர் (பிரதேச சபை உறுப்பினர்), திரு. I.A. கலீலூர் ரஹ்மான் (கொழும்பு மாநகர சபை உறுப்பினர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் முன்னாள் வக்ப் சபை உறுப்பினர் மௌலவி இஜ்லான் (காசிமி), தமிழ்நாட்டை சேர்ந்த மார்க்க அறிஞர் முஸ்தபா மஸ்லஹி, பிராண்டியாவத்தை பள்ளிவாசல் கதீப் ஆகியோர் மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தியதுடன், அகில இலங்கை ஸூபி ஆன்மீகப் பேரவையின் தலைவர் மௌலவி அப்துல்லாஹ் நூரி அவர்கள் துஆப் பிரார்த்தனை நிகழ்த்தினார்.

மேலும் மாணவிகளின் குர்ஆன் ஓதல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் அமைப்பின் தலைவி அல்ஹாஜ் M.Z. அஹ்மத் முனவ்வர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட், கொழும்பில் இருந்து வருகை தந்த பல்துறைசார் பிரமுகர்கள் உட்பட பிரதேச உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், வர்த்தக பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், தாய்மார்கள், மாணவர்கள் உட்பட சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *