உள்நாடு

காலி மக்களின் மனித நேய செயலை பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா பாராட்டியுள்ளார்

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து, இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை வழங்க முன்வந்த, காலி பொதுமக்களுக்கும் உள்ளூர் அமைப்புகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

காலி கடற்பரப்பிற்கு அப்பால் விபத்துக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகள், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர்களுக்குத் தேவையான ஆடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை காலி புற்றுநோய்ச் சங்கம் (Galle Cancer Society) மற்றும் பிரதேச மக்கள் இணைந்து வழங்கியுள்ளனர்.

கடினமான சூழலில் தமது நகருக்கு அழைத்து வரப்பட்ட இந்த வெளிநாட்டு மாலுமிகளுக்கு, மனிதாபிமான அடிப்படையில் நன்நோக்கம் கருதி, காலி மக்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்த மனித நேய செயல், அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது என்றும், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *