உள்நாடு

அனுராதபுரம் சாஹிராவில் நடைபெற்ற கத்தார் தொண்டு நிறுவனத்தின் மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்வு

வடமத்திய மாகாண ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் கத்தார் தொண்டு நிறுவனம் வடமத்திய மாகாணத்தில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு உதவும் வகையில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.

இதன் போது ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆனந்த ரத்நாயக்க, மக்கள் தொடர்பு அதிகாரி அசேல விஜேரத்ன, கத்தார் தொண்டு நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி மற்றும் சாஹிரா கல்லூரியின் அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *