அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் ஆசிரியர் வசீம்
நீர்கொழும்பு போறதோட்ட அல்-பலாஹ் கல்லூரியின் உதவி அதிபரும், கணித பாட ஆசிரியருமான ஏ.பி. வசீம் நேற்று வெள்ளிக்கிழமை (13) அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
15 வருட ஆசிரியர் சேவையில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியினையும், ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி மாணவர்களின் மனதை கவர்ந்த ஒரு சிறந்த ஆசிரியராவார்.
இவர் சமூக சேவையாளர் சமூகத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையவராகவும், சிறந்த ஆளுமை மிக்கவராகவும், எல்லோரோடும் நன்றாக பழகக்கூடியவராகவும் மனிதாபிமானமிக்கவராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
