உள்நாடு

மின் கட்டண திருத்தம்; மாத இறுதியில் ஆணைக்குழு அறிக்கை

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் இந்தமாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு மின் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை ஒன்றை முன்வைத்தது.

இந்த மின் கட்டண திருத்தம் குறித்து பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, பொது மக்கள் கருத்து கோரல் கட்டங் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வின் மூன்றாம் நாள் இன்று மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *