இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நோன்புப் பெருநாள் சிறப்பு கவியரங்கம்
எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு நோன்பு பெருநாள் தினம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை சிறப்பு கவியரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
முஸ்லிம் சேவை பணிப்பாளர்
பாத்திமா ரினுசியா அவர்களின் பணிப்புரையில்
ஏ.எம். முஹம்மது ரலீம் தயாரித்து வழங்கும் இச்சிறப்பு கவியரங்கு
கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் தலைமையில் இடம் பெறும்.
பெருநாள் தினத்தன்று காலை
10:00 – 11:00. வரை 102.1 MHz, 102.3 MHz ஆகிய அலைவரிசைகளில் இக்கவியரங்கம் ஒலிபரப்பு செய்யப்படும்.
காத்தான்குடியைச் சேர்ந்த M.A.M.நிஷவ்ஸ்,
குருநாகல் றஸ்மினா றாஸிக்
கலேவெல ராஜன் நசீர்தீன்,
லுதுபியா லுக்மான்,
கலாநெஞ்சன் கெகிராவ சாஜஹான், சட்டத்தரணி நூருஸ் ஸப்னா சிராஜுதீன் ஆகிய கவிஞர்கள் இங்கு கவிதை பாட உள்ளனர். இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இலக்கிய நிகழ்வுகளுக்கு இவ்வாறு களம் அமைத்துக் கொடுப்பது பாராட்டத்தக்க விடயமாகும். அந்த வகையில் முஸ்லிம் சேவை பணிப்பாளர்
பாத்திமா ரினுசியா, நிகழ்ச்சி தயாரிப்பாளர்
ஏ.எம். முஹம்மது ரலீம் ஆகியோர் இதயத்து நன்றிக்குறியவர்கள்.

