ஹாசிம் உமர் பவுண்டேஷன் அனுசரணையில் கற்பிட்டி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
கற்பிட்டி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் முதன் முறையாக ஹாசிம் உமர் பவுண்டேஷன் அனுசரணையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு புதன்கிழமை (11) பள்ளிவாசலின் பரிபாலன சபைத் தலைவர் மௌலவி எஸ் எம் எம் சாதிக் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது
இவ் இப்தார் நிகழ்வில் கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் மௌலவி எம்.ஏ.பீ.எம் முபாஸில் (உஸ்மானி) சிறப்புரை ஆற்றினார்.
ஹாசிம் உமர் பவுண்டேஷன் அனுசரணையில் கற்பிட்டி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் மாணவர்கள், உஸ்தாத்மார்கள், உலமாக்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
