வடமத்தியில் அதிகாரிகளுக்கு மடிக்கணினிகள்
வடமத்திய மாகாண காணி ஆணையகத் திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் காலணி அதிகாரிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு மாகாண வசந்த ஜினதாச தலைமையில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது வடமத்திய பிரதேச செயலகங்களில் பணியாற்றும் 19 அதிகாரிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களுக்கு காணிகளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்கவும் அந்தப் பணிகளை மிகவும் திறமையாகவும் துல்லியமானதாகவும் மேற்கொள்ள உதவும் வகையில் இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆனந்த ரத்நாயக்க , மாகாண காணி அமைச்சின் செயலாளர் சுபாஜினி மதியழகன், மாகாண காணி ஆணையாளர் ஜி.ஏ.கித்சிறி , உதவி காணி ஆணையாளர் நடேஷானி மல்லேவ உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
