உள்நாடு

புத்தளம் “80ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ்” அமைப்பினருடைய விசேட ஒன்று கூடலும், இப்தார் நிகழ்வும்

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் 1980 க.பொ.த. சாதாரண தர பழைய மாணவர் குழுவினரான “80ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ்” அமைப்பினருடைய விசேட ஒன்று கூடலும், இப்தார் நிகழ்வும் புதன்கிழமை (11) மாலை புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்திருக்கின்ற அதன் சிரேஷ்ட அங்கத்தவர் எஸ்.எச்.எம்.ஜப்ரிஸின் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.

சஹீரியன்ஸ் ஹீரோஸின் ஆணைக்குழு தவிசாளரும், புத்தளம் சிராம்பியடி ஷெல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் இந்த இப்தார் நிகழ்வுக்கு பூரண அனுசரணை வழங்கி இருந்தார்.

அமைப்பின் தலைவர் பவாஸ் ரஸீன் மஹ்ரூப், செயலாளர் ஜே.எம்.சுபியான், பொருளாளர் எம்.யூ.எம்.பாசிர் உட்பட சுமார் 30 அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அமைப்பின் ஆலோசகரும், புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி அதிபருமான அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜின் வழிகாட்டலில், அமைப்பாளரும், கவிஞரும், பாடகருமான எஸ்.எம்.இஹ்தியாஸ், குழும அங்கத்தவர்கள் அனைவருக்கும் இதற்காக தனிப்பட்ட அழைப்பினை விடுத்திருந்தார்.

அமைப்பின் தும்மோதரை பிரதேச அமைப்பாளரும், மதுரங்குளி டெக்னோ எரிபொருள் நிரப்பு நிலைய இணைப்பாளருமான நயீம் அலாவுத்தீன், வெளிக்கள உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முஜாகித் மற்றும் ஜப்ரிஸின் குடும்ப உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை சச்சிதமாக செய்து முடித்திருந்தனர்.

அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினரும், பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலய ஓய்வு பெற்ற அதிபருமான எம்.முஹுதார் நன்றியுரையினை நிகழ்த்தினார்.

இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் இந்த இப்தார் நிகழ்வில் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் சகோதர மதங்களை சேர்ந்த அமைப்பின் கரம்பை பிரதேச அமைப்பாளரும், கரம்பை சிவில் பாதுகாப்பு குழு தலைவருமான திரு.ராசலிங்கம், புத்தளம் லங்கா ஜுவல்லரி உரிமையாளர் திரு.பாஸ்கரன், ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் க்ஸேவியர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *