உள்நாடு

இஹலபுளியங்குளம் அந் நஹ்லா அஹதிய்யாவில் இப்தார் நிகழ்வு

அனுராதபுரம் இஹலப்புளியன்குளம் அந் நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த இப்தார் நிகழ்வு அந்நஹ்லா பாடசாலையின் தலைவர் தேசமான்ய பீ.ஜாயிஸ் (உஸ்வி) யின் வழிகாட்டலில் அதிபர் எம்.ஆர்.எம்.ரனீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள் இஹலபுளியன்குளம் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எஸ்.ரிபான் , ஹக்மன் பவுண்டேஷன் ஸ்தாபகர் ஏ.எம்.ஹலீம் மற்றும் அந் நஹ்லா பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவி ஜே.எப்.மிஸ்கா வின் ரமழான் பற்றிய சிறப்பு கவிதையும் மாணவி எம்.எம்.எப்.மனாலின் ரமழான் பற்றிய சிறப்பு உரையும் இடம்பெற்றது.

மேலும் அஹதிய்யாவின் மழை மாணவரும் ஜாமிய்யா நளீமிய்யா கலா பீடத்தின் மாணவனுமாகிய ரீ.எம்.அல்தாப் பின்  விஷேட உரையும் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளை மாணவி என்.எப்.நிப்ரா தொகுத்து வழங்கினார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *