உள்நாடு

முஸ்லிம் செரிட்டி செரண்டிபின் ரமழான் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நல்லாந்தழுவையில்

புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தின் நல்லாந்தழுவை பகுதியில் விதவைகள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு
முஸ்லிம் செரிட்டி செரண்டிப்பின் இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் “ரமழான் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

முஸ்லிம் செரிட்டி செரண்டிப்பின் ரமழான் உலர் உணவு பொதிகள் வழங்கும் திட்டம் 2026 இன் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்நிகழ்வில் முஸ்லிம் செரிட்டி செரண்டிப், இலங்கை அமைப்பின் பணிப்பாளர் முஜாஹித் நிஸார், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏஹ்யா அப்தீன், மற்றும் நல்லாந்தழுவை ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி நிருபர் எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *