உள்நாடு

சிறுவர் பூங்கா திறப்பு விழா மற்றும் இப்தார் வைபவம்

“To wards Smart Humaisara”
வேலைத்திட்டதின் அடிப்படையில் 2005 க. பொ. த. (சா.த) பிரிவு பழைய மாணவர்களினால் அமைக்கப் பட்ட சிறுவர் பூங்கா அங்குரார்பன நிகழ்வும், 2005 ஆண்டு க. பொ. த (சா.த) மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இப்தார் நிகழ்வும் பேருவலை, சீனங்கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் பர்ஸான் ஜுனைதீன் தலைமையில் இடம்பெற்றன.

2005 ஆண்டு க. பொ. த (சா.த) கல்வி கற்று காலம்சென்ற அஸ்மத் அக்தாப் மர்சூக், இஷ்ரத் இக்பால், ரிபாஸ் நாஸிர், பஸீஹுல் ரியாஸ் லிஸான் ஆகியோரது பெயரில் சிறுவர் பூங்கா பெயரிடப்பட்டு அதிபர் பர்ஸான் ஜுனைதீனினால் திறந்து வைக்கப்பட்டது.

இவ் வைபவத்திற்கு பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அல்ஹாஜ் மிஸ்வர் காஸிம் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், 2005 க.பொ.த. (சா/தரத்தில் ) கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *