உள்நாடு

கிராமசேவகர் பிரிவுக்கு ஒரு வீடு; சாய்ந்தமருதில் அடிக்கல் நடும் நிகழ்வு

பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவில் (08) நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகப்பரிவுக்கு ஒதுக்கப்பட்ட 15 வீடுகளில் முதல் 03 வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வானது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர் மற்றும் பிரதேச செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ். இம்தியாஸ், இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப், பிரஜாசக்தி தவிசாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *