உள்நாடு

மறைந்த ஈரானின் அதி உயர் தலைவர் கௌரவ அலி காமனெயி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் குழு ஈரான் தூதுவர் இல்லத்திற்கு விஜயம்

அமேரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களினால் பலியான ஈரானின் அதி உயர் தலைவர் கௌரவ அலி காமனெயி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் குழுவினர் கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தித்திற்கு 2026 மார்ச் 05 அன்று விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த அனுதாபப் பதிவேட்டில் கையொப்பமிட்டதுடன் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் அவர்களை சந்தித்து தாக்குதல்கள் குறித்த தமது கண்டனங்களையும் தெரிவித்தார்.

அதனையடுத்து, அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி அவர்களுக்கான அனுதாபச் செய்தியும் தூதரக அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதில், ஜம்இய்யா சார்பில் பொதுச் செயலாளர் அவர்களுடன் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம் ளரீஃப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *