உள்நாடு

போர்ச் சூழலினால் உயிர்நீத்த ஈரானிய மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஈரான் தூதரகத்திற்கு விஜயம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று இலங்கைக்கான ஈரானிய தூதரைச் சந்தித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்சமயம் நடந்து வரும் போர்ச்சூழலால் உயிரிழந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரானியர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார்.

அவ்வாறே, தற்சமயம் நடந்து வரும் போர் சூழலால் ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் குவைட் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உயிரிழந்த மக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபங்களையும் இரங்கலையும் இதன்போது தெரிவித்தார்.

இந்த மோதல்கள் முடிவுக்கு வந்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு பிரார்த்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *