உள்நாடு

பெண்களின் சுயதொழிலை முன்னேற்றும் நோக்கில், அநுராதபுர மாவட்டத்தில் மூன்றாவது முறையாகவும் ஆர். ஜே மீடியாவின் இலவச செயலமர்வு

ஆர். ஜே மீடியா ஊடக வலையமைப்பு, தனது ஆறு வருடப் பூர்த்தியை முன்னிட்டு, இலங்கையின் 25 மாவட்டங்களையும் மையமாகக் கொண்டு, பெண்களின் சுய தொழிலை ஊக்கப்படுத்தும் முகமாக ஊடகம், தலைமைத்துவம், மணப்பெண் அலங்காரம், மரவ அலங்காரம், கேக் தயாரிப்பு, அழகுக்கலை பயிற்சி மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு, மருதாணிக் கலை
மற்றும் மருதாணி தயாரிப்பு உள்ளிட்ட ஏழு துறைகளை அடிப்படையாகக் கொண்டு இலவச செயலமர்வுகளை நாடளாவிய ரீதியில் நடத்தி வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக, அநுராதபுர மாவட்டத்தை மையமாகக் கொண்டு, மூன்றாவது முறையாகவும் ஒரு நாள் இலவச செயலமர்வு, அண்மையில் இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையில், ஆர். ஜே மீடியா வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எம். இன்ஷாப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக, மாணவர்களுக்கான மருதாணிப் பயிற்சியினை இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மாணவியும், மருதாணிப் பயிற்றுவிப்பாளருமான ஹஷ்மா ஷபீன், மணப்பெண் அலங்காரம் தொடர்பான விரிவுரையை தகவல் தொழில் நுட்பக் கற்கையில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவரும், அழகுக் கலை நிபுணருமான என்.எப். அப்ரா, கேக் தயாரிப்பு பற்றிய விரிவுரையை எஸ்.ஆர். பேக்கரி உரிமையாளரும், கேக் கலை பயிற்றுவிப்பாளருமான ஆர். சிப்னா ரிஸ்லான், அழகு சாதனப் பொருட்கள் பயிற்றுவிப்பினை ஷைன் ப்ரொடக்ட் ப்ரைவேட் லிமிடெட் உரிமையாளர், ஷீ அகடமி உரிமையாளர் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் பயிற்றுவிப்பாளருமான ஜமீளத்துள் நளீரா, மருதாணி தயாரிப்பு தொடர்பான விரிவுரையை பாத்திமா ஷகீகா மற்றும் மரவ அலங்காரம் தொடர்பான விரிவுரையை ரோயல் கேக் உரிமையாளரும் மரவ அலங்காரம் பயிற்றுவிப்பாளருமான எஸ்.எப். இம்சானா சிராஜ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

தலைமைத்துவம் மற்றும் ஊடக செயலமர்வை ஆர். ஜே மீடியா பணிப்பாளரும், ஊடகப் பயிற்சிவிப்பாளருமான ஏ.எம். இன்ஷாப் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக, ரோயல் கேக் உரிமையாளரும், மரவ அலங்கார பயிற்றுவிப்பாளருமான
எஸ்.எப். இம்சானா சிராஜ், எஸ்.ஐ. பிரைடல் உரிமையாளர் ஐ.இஷாபா‌ சவ்கி, ஆலா அகடமியின் உரிமையாளர் ஐ.இபாஷா ஆஷிக் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சி.எப். சபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அநுராதபுர மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் ஏராளமானோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு, கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *