கலீபதுல் குலபா M.Z.முஹம்மத் ஆலிமின் ஈரானிய உறவுகளுக்கு புனித ரமழான் மாதத்தில் மனித நேயப் பணி
அமெரிக்கா கடற்டடை நீர்மூழ்கி கப்பலினால் தாக்கப்பட்டு இலங்கையின் தென்னிலங்கை கடற்பகுதியில் கடலில் மூழ்கிய ஈரானிய கடற்படை கப்பலில் இருந்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட காயமடைந்த முப்பத்திரண்டு ஈரானிய கடற்படை வீரர்கள் காலி கராப்பிடிய பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தகவல் கிடைத்தவுடன், கலீபதுல் குலபாவும் காலி மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் தலைவருமான எம்.இஸட். முஹம்மத் ஆலிம் சிகிச்சை பெறும் ஈரானிய உறவுகளுக்கு மனித நேயம் பணி செய்து உரையாடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
(எம்.எஸ்.எம். முன்தஸிர்)
