உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையினால் சின்ன நாகவில்லுவுக்கு டிட்வா புயல் நிவாரணம்

டிட்வா புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கரைத்தீவு சின்னநாகவில்லு பகுதியைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு 27.02.2026 சனிக்கிழமை அன்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் முன்னெடுப்பில் நடைபெற்றதுடன், கரைத்தீவு மஸ்ஜித் சம்மேளனமும் ஒத்துழைப்பு வழங்கியது.

புயலால் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அன்றாட வருமான வாய்ப்புகளை இழந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வுலர்உணவு பொதிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.

இந்த நிவாரண செயற்பாட்டின் மூலம் பல குடும்பங்கள் உடனடி உணவு நெருக்கடியிலிருந்து விடுபட்டு நிம்மதியடைந்துள்ளனர்.

இந்நல்லுடைமையில் நன்கொடையாளர்களாக ஒத்துழைப்பு வழங்கிய மடலகம மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபைக்கும்,
மேலும் இந்த உதவி திட்டத்தை முன்னெடுத்த ஜம்இய்யாவின் ஜூம்ஆ விவகார மற்றும் பிறை விவகார பொறுப்புதாரி அஷ்ஷேக் ரகீப் ரஷாதி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகசேவை பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக்கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *