விபத்துக்குள்ளான ஈரானியக் கப்பல், மீட்புப் பணிகள் துரிதம், 32 பேர் மீட்பு; பாராளுமன்றில் வெளிவிவகார அமைச்சர்
காலி கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானதாக வெளியான செய்தி உண்மை என்றும், அந்த விபத்து இலங்கை கடல் பகுதியில் நிகழவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (04) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இது கூறப்பட்டது.
இருப்பினும், இலங்கை கடற்படை விரைவாகச் செயல்பட்டு விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்த சுமார் 30 பேரை மீட்டு காலி கராப்பிட்டி மருத்துவமனையில் சேர்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தின்படி, அருகிலுள்ள கடல் எல்லையில் விபத்து ஏற்பட்டால், அது இலங்கை கடல் பகுதியில் இல்லாவிட்டாலும், அவர்களை மீட்கும் பொறுப்பு உள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், கப்பலில் உள்ள ஊழியர்களை வெளியேற்றுவதற்காக மீட்புப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சி.டி ஆர் சம்பத் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக விபரங்கள் தற்போதைக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்குள்ளான பின்னர் குறித்த கப்பல் அபாய சமிக்ஞையை (Distress call) வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
