“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்டம் ஓட்டமாவடியில்
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒர் அங்கமாக. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் ரிவர் பாக்கில் நேற்று (03) மாலை இடம் பெற்றது.
இதன் போது “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்” – அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக் கொண்டு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதுடன் முச்சக்கரவண்டிகளில் ஸ்டீக்கர்களூம் ஒட்டப்பட்டன.
இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், உதவி பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.பாறூக், பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் எம்.ஐ.ஏ.சஜ்ஜாத், பிரதேச சபை உறுப்பினர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வாழைச்சேனை விஷேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, பிரஜா சக்தி தவிசாளர்கள், பிரதேச செயலக போதை ஒழிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என பலர் கலந்து கொண்டனர்
மார்ச் மாதம் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல்” திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.






(எஸ்.எம்.எம். முர்ஷித்)
