வெளிநாட்டவர்களுக்கான விசா செல்லுபடிக்காலம் நீடிப்பு
Qமத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் மோதலால் ஏற்பட்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கான விசா செல்லுபடி காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விசா நீட்டிப்புக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
