மன்னார் மாவட்டத்தில் அ.இ.ஜ. உலமா கிளையின் கட்டிடம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்
மன்னார் மாவட்டத்தின் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபைக்கான மன்னார் நகரக் கிளை அலுவலக கட்டிட நிர்மாணம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் (1) இடம் பெற்றது.
மன்னார் மூர்வீதி பள்ளிவாசலில் இந்த ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது.
மன்னார் நகர ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அசீம் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மனித உரிமை மற்றும் ஏனைய உரிமைகள் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளரும், சமாதான தூதுவருமான தொழிலதிபர் ஷேக் அமானியும் இதன் போது கலந்து கொண்டார்.
மேற்படி கட்டடத்திற்கான நிர்மாண பணிகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிப்பதற்கான தீர்மானமும் இதன் போது எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
