உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கஹடோவிட்ட, சியன ஊடக வட்டம் ஏற்பாடு செய்த சிறப்பு இப்தார் நிகழ்வு நேற்று (2026 பெப்ரவரி 28) கஹடோவிட்டயில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சியன ஊடக வட்டத்தின் தலைவர் அல்ஹாஜ். எம்.இசட். அஹமட் முனவ்வர் அவர்களின் தலைமையில் கஹடோவிட்ட, முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சர்க்கிளில் (Muslim Ladies Study Circle) இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ் செய்திப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் யூ.அய். யாகூப், சுயாதீன தொலைக்காட்சி சேவை தமிழ் செய்திப் பிரிவின் முன்னாள் முகாமையாளர் சித்தீக் ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், பல் துறை சார்ந்தோர், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ரமழான் மாதத்தின் புனிதத்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் இந்த இப்தார் சந்திப்பு அமைந்திருந்தது.

இந்நிகழ்விற்குப் பூரண அனுசரணையினை ஹாஷிம் உமர் பவுண்டேஷன் நிறுவனம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.ஏ.எம். பவாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *