தரமற்ற நிலக்கரி இறக்குமதி, ஆராய்வதற்கு எதிர்க்கட்சி தலைமையில் தெரிவுக்குழு அமைக்கவும்; சஜித் பிரேமதாச வேண்டுகோள்
அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி தரமற்றவை என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 8 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவை என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
அச்சமயங்களில் ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறு கூறியபோது இதை மறுத்த அரசாங்கம், தற்போது இந்த நிலக்கரி கப்பல்கள் தரமற்றவை என்று ஒப்புக்கொள்வதோடு, எந்த மோசடியும் இதில் இடம்பெறவில்லை என்று கூறுகிறது.
இருப்பினும், இது ஒரு மோசடி என்பதால், இந்த விவகாரத்தை ஆராய எதிர்க்கட்சி தலைமையிலான தெரிவுக் குழுவொன்றை ஸ்தாபிக்கு வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றை முன்வைத்து தெரிவித்தார்.
