வட மத்தியில் 40 விலங்கு மேம்பாட்டு ஆலோசகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு
வடமத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் 40 விலங்கு மேம்பாட்டு ஆலோசகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள வளாகத்தில் (24) நடைபெற்றது.
வடமத்திய மாகாணத்தில் 56 விலங்கு மேம்பாட்டு ஆலோசகர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 33 அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த 7 அதிகாரிகள் உட்பட 40 பேருக்கு சலுகை கட்டணத்திட் டத்தின் கீழ் இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
வடமத்திய மாகாணத்தின் கிராமப்புற மக்களின் கால் நடை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு மாகாண சபை நிதியிலிருந்து இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருந்த போதும் 2025 ஆம் ஆண்டு எந்த மாகாண சபையும் கள அலுவலர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது மாகாண விவசாய செயலாளர் சுபாஜினி மதியலகன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
