ஐந்து ஆசிரிய ஆசான்களுக்கு உக்குவளையில் கெளரவம்
உக்குவளை மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “வாழ்வோரை வாழ்த்துவோம்” எனும் தலைப்பில் உக்குவளை பிரதேசத்தில் வாழும் 44 வருடகால சிறப்புக்குரிய ஆசிரியப் பணிகளாற்றி ஓய்வுபெற்ற தெரிவுசெய்யப்பட்ட ஐந்து ஆசிரிய ஆசான்களான எஸ். ஹலீம்தீன், எம்.ரவூப், எம் . ஐன்தீன், எம். தவ்பீக், (சகோதரர்கள்) எம். ராசிக், ஆகியோர் நினைவு விருதுகளுடன் கவிதைப்பா பாராட் டு பத்திரங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆசிரியையும் கவிதாயினியுமான திருமதி பஸ்மினா அன்சார் இவ்வாசிரியர்களை அவர் இயற்றிய கவிதைகளால் பாராட்டி கவிதைப்பா பத்திரங்களை அவர்களுக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வொன்றிய தலைவர் ஏ.எம். தயலமி தலைமையில் அவரது இல்லத்தில் கடந்த ஞாயிறன்று (22) நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பொருளாளர் ஆகியோர் ஒத்துழைப்புடன் ஆசிரிய ஆசான்களின் துணைவியர்கள் ஊர்ப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ஆசிரிய ஆசிரியரகளுக்கு நினைவு விருதுகளை வழங்கிவைத்தனர்.






