ரணிலை சந்தித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் குழு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (பிப்ரவரி 25) காலை
கலந்துரையாடியுள்ளது.
கொழும்பில் உள்ள ஃப்ளவர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இந்தச் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கட்சித் தலைவர்களிடையே ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுவது குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக
இந்தக் கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தரமற்ற நிலக்கரி ஏற்றுமதி, பாதாள உலகக் கொலைகள் மற்றும் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் குறித்து நீண்டநேர
கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதன்போது உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜி.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க, தலதா அதுகோரலே,
பிரேம்நாத் சி. டோலவத்த, மற்றும் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
