துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கெளரவம்
காலி மாவட்ட துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2015-2025 வரையான காலப்ப்குதியில் க. பொ. த (சா/தர) பரீட்சையில் 9A மற்றும் 8A பெற்று சித்தியடைந்த மற்றும் க. பொ. த. (உ/தர) பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைகழகம் மற்றும் கல்விக் கல்லூரிகளுக்கு தெரிவாகிய மாணவர்களை பாராட்டி கெளரவித்தல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களைப் பாராட்டிக் கெளரவிக்கும் விழா அண்மையில் பாடசாலை மைதானத்தில் அதிபர் ஜனாபா மப்ரூஹா தலைமயில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் காலி வலய தமிழ் கல்விப் பணிப்பாளரும் துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவனுமான ஐ.எம்.எம் யூஸுப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். நிகழ்வில் பென்தோட்டை கல்விப் பணிப்பாளர், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊர் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வை பாடசாலை முகாமைத்துவ குழுவினர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இனைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத் தக்கது.




(பேருவலை பீ.எம்.முக்தார்)
