உள்நாடு

தித்வா புயலினால் பாதிக்கப்பட்டோரை மீட்பதில் தியாகத்துடன் உழைத்த மருதானை மீனவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

தித்வா புயலினைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகச் சென்ற பேருவளை மருதானை கடற்றொழிலாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பேருவளை மருதானை பீ.ஆர் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

லன்டன் லைசெஸ்டர் மாநிலத்தை சேர்ந்த “மஸ்ஜித் பிடா” அமைப்பின் அனுசரணையுடன் பேருவளை மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலய 1992 க.பொ.த சாதாரன தர வகுப்பு மாணவர் குழுவினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி மாணவர் குழுத் தலைவர், ஆசிரியர் அஷ்ஷெய்க் அஹமட் ஸுஹைர் ஸாலி தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பிடா அமைப்பின் இலங்கை ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க் யூனுஸ் தப்ரீஸ் விசேட பேச்சாளராக கலந்து கொண்டார்.

பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் பேருவளை முன்னால் நகர பிதாவும் தற்போதைய உறுப்பினருமான அல்ஹாஜ் மஸாஹிம் முஹம்மத், நகர சபை உறுப்பினர் முஹம்மத் ஹிஷாம், சவுதி அரேபிய தூதரக முன்னால் நிருவாக அதிகாரி அல்ஹாஜ் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நஸீர் (நளீமி), தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாத், பேருவளை ஜனாஸா நலன்புரிச் சங்க உப தலைவர் அல்ஹாஜ் இக்பால் சம்சுதீன், மருதான செரிடி அமைப்பின் தலைவர் தஸ்தகீர் பாட்ஷா, பேருவளை மருதானை கடற்றொழில் சங்கத் தலைவர் எம்.எப்.எம். ரினோஸ், மருதானை பிரிமியர் லீக் தலைவர் உட்பட உலமாக்கல், ஊர் பிரமுகர்கள், கடற்றொழில் சங்க உறுப்பினர்கள், பேருவளை மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலய 1992 க.பொ.த. சாதாரன தர வகுப்பு மாணவர் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடற்றொழிலாளர்களை கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதோடு உலர் உணவுப் பொதிகளும் கையளிக்கப்பட்டன.

தித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்பதற்காக களத்தில் இறங்கி தியாகத்துடனும், துனிச்சலுடனும் பங்களிப்புச் செய்த மருதானை கடற்றொழிலாளர்களை பாராட்டி கௌரவிக்க முன்வந்ததையிட்டு மேற்படி குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மருதானை கடற்றொழிலாளர்கள் மிகப் பெரிய சேவையொன்றை தியாகத்துடனும் துனிச்சலுடனும் கடந்த தித்வா அனர்த்தத்தின் போது செய்து முழு நாட்டு மக்களினதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த கடற்றொழிலாளர்களின் வீரம் மற்றும் துனிச்சலை அஷ்செய்க் யூனுஸ் தப்ரீஸ் மற்றும் ஆசிரியர் அஷ்ஷெய்க் அஹமட் ஸுஹைர் ஸாலி ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

மேற்படி குழுமத்தின் சார்பில் சஹ்மி சஹீட் நன்றியுரை நிகழ்த்தினார்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *