மத்திய முகாமில் சிரமதானப்பணி முன்னெடுப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு போன்ற நோய்களை தடுக்கும் வகையில் மத்திய முகாம் மஸ்ஜிதுல் முகம்மதிய்யா ஜும்மா பள்ளிவாசலில் சிரமதானப் பணி நேற்று (13) ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆரோக்கியமான மற்றும் சுத்தமான சூழலை உருவாக்கும் நோக்கிலும், எதிர்வரும் ரமலானை வரவேற்கும் நோக்கிலும் மத்திய முகாம் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினால் இச்சிறமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக மத்திய முகாம் ஜும்மா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சிரமதானப்பணி எதிர்வரும் காலங்களில் மத்திய முகாம் பிரதேச பாடசாலைகள், மைதானங்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர், மத்திய முகாம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


(ஏ.எச்.எம்.ஹாரீஸ்-மத்திய முகாம் செய்தியாளர்)
