உள்நாடு

கொழும்பு மாநகர சபை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வண்ணாத்திச் சின்ன உறுப்பினர் ராஜினாமா செய்தார்

2025 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, வண்ணாத்தி சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட அல்ஹாஜ் ஜவ்பர் அவர்கள் இன்று தனது கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை உத்தியோகபூர்வமாக கொழும்பு மாநகர சபை மேயரிடம் கையளித்தார்.

மேலும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஒவ்வொரு முறையும் அதிகப்படியான வாக்குகளை பெற்றவர்களுக்கு சுழற்சி முறை அடிப்படையில் மாநகர சபை உரிப்பு உரிமை பதவியினை வழங்குவதனை கொள்கையை வழக்கமாக கொண்ட ஒரு கட்சி.

அந்த அடிப்படையிலேயே தங்களுடைய கொள்கையையும், உறுப்பினர்களுக்கு அளித்த வாக்குறுதியினையும் நிறைவேற்றும் முகமாக முன்கூட்டியே இன்று உறுப்பினர் பதவியினை ராஜினாமா செய்ததுடன் அடுத்து அதிகப்படியான வாக்குகளை பெற்ற புதியதொரு உறுப்பினராக கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த சகோதரர் பந்துள ரனவீர அடுத்து வருகின்ற ஒரு வருடத்திற்கு சேவையாற்றுவதற்கு பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலீலூர் ரஹ்மான்,
பொதுச் செயலாளர்,
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *