ஓட்டமாவடி பிரதேச சபையில் கௌரவிப்பு நிகழ்வு
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்களில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவித்த நிகழ்வு புதன்கிழமை (11) ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி மற்றும் மீராவோடை ஆகிய பொதுநூலகங்களின் நூலகர்களான எம்.சீ.எம்.சரீப் ஹுஸைன், எம்.எம்.பாத்திமா பானு ஆகியோர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன் கலந்து கொண்டார்.
இதில், பிரதேச பாடசாலை மாணவர் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின்போது, மீராவோடை பொது நூலகத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற எஸ்.எம்.சமட் மற்றும் மீராவோடை பொது நூலக சிறந்த வாசிப்பாளர் எச்.எம்.எம்.அலியார் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.



(எச்.எம்.எம்.பர்ஸான்)
