உள்நாடு

சம்மாந்துறை உப டிப்போவை மீளஇயங்க வைப்பதற்கானகலந்துரையாடல்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் திரு. சஞ்சீவ, பதில் செயலாற்று முகாமையாளர் திரு. அதுல ஆகியோரை இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை காரியாலயத்தில் சந்தித்தார்.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் சம்மாந்துறை உப-டிப்போவை மீள சம்மாந்துறையில் இயங்க வைப்பதற்கான தீர்மானம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் திரு. பிமல் ரத்நாயக்க தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு போக்குவரத்து அமைச்சின் செயலாளரால் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரையும் எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட பின் விரைவில் சம்மாந்துறை உப-டிப்போவை மீள சம்மாந்துறையில் இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் திரு. சஞ்சீவ தெரிவித்தார்.

(கே. எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *