உள்நாடு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணித் தலைவராக கற்பிட்டி சாஹிர் இஷ்ரட் ஹூசைன் நியமன‌ம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதைபந்தாட்ட அணியின் 2026 ம் ஆண்டிற்கான தலைவராக அப்பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்தில் (Faculty of applied science) இறுதி வருட மாணவராக கல்வி கற்று வரும் கற்பிட்டி சாஹிர் இஷ்ரட் ஹூசைன் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்

கடந்த மூன்று ஆண்டுகளாக பல்கலைக்கழக அணியின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் இவர் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தமையின் காரணமாக இந்த தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதைபந்தாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள
கற்பிட்டி சாஹிர் இஷ்ரட் ஹூசைன் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மற்றும் கடையாமோட்டை தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரும் புத்தளம் மாவட்ட லீக் பேர்ள்ஸ் அணியின் அங்கத்தவருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *