புனித ரமழானை முன்னிட்டு குவைதினால் இலங்கை முஸ்லிம்களுக்கு 25 தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
குவைத் நாட்டின் 65ஆவது தேசிய தினம் நாளை கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 25 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் குவைதினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
குவைத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள 16 இலங்கை முஸ்லிம் தன்னர்வ நிறுவனங்களுக்கு ஊடாக இந்த பேரீச்சம் பழங்கள் பகிர்ந்துள்ளிக்கப்படவுள்ளன.
இந்த பேரீச்சம் பழங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள குவைத் தூதுவராலயத்தில் (08) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் குவைத்தின் தூதுவராலயத்தின் பொறுப்பாளர் அப்துல்லாஹ் அல் முஹன்னாஸ் குவைத்திலிருந்து இலங்கை வருகை தந்துள்ள அஷ்ஷேக் மன்சூர் ஜப்பார் ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளிவாசல்கள் மற்றும் சமுக சேவை இயக்கங்கள் ஊடாக இந்த பேரீச்சம் பழங்கள் வழங்கிவைக்கப்படும் என இந்த அமைப்புக்களினதும் இத்திட்டத்தின் ஒருங்கினைப்பாளர்கள் அல் – ஹிமா பவுண்டேசனின் பணிப்பாளர் அஷ்ஷேக் நூருல்லாஹ் மற்றும் இஷாக் மெளலவி ஆகியோர் இணைந்து தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய குவைத்தின் தூதுவராலயத்தின் பொறுப்பாளர் அப்துல்லாஹ் அல் முஹன்னாஸ்,
“இலங்கை – குவைத் நட்புறவின் திட்டத்தின் கீழ் குவைத் அரசாங்கம் இலங்கையில் அவ்வப்போது இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்வி, வீடமைப்பு மற்றும் பாதை அபிவிருத்தி என பல்வேறு திட்டங்களுக்கு இலங்கைக்கு உதவி வருகின்றது.
அத்துடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடந்த 4 தசாப்த காலங்கள் குவைத் நாட்டில் தொழில் செய்து வருகின்றனர்.
இலங்கை – குவைத் நட்புறவு கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக நிலவி வருகிறது” என்றார்.






(அஷ்ரப் ஏ சமத்)
