இன்று வறண்ட வானிலை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (10) வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
