உள்நாடு

பலகத்துறை அல்- பலாஹ் மகளிர் கல்லூரிக்கு காணி வாங்க நிதியுதவி

பலகத்துறை அல் பலாஹ் கல்லூரியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இட நெருக்கடியைத் தீர்த்து வைக்கும் முகமாகவும் எதிர்காலத்தில் மாணவர்களது ஒழுக்க விழுமியங்களை கருத்தில் கொண்டும் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் இரு வேறு பாடசாலைகளை உருவாக்கும் நோக்கத்துடனும் புதிய காணி ஒன்றைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் பழைய மாணவர் சங்கம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பாடசாலைக்கு அண்மையில் 97 பர்ச்சஸ் காணி ஒன்று பாடசாலை நிர்வாகத்தினால் அடையாளம் காணப்பட்டு அதனை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

தனவந்தர்கள் தனிப்பட்ட இமுறையிலும், இயக்கங்கள் அமைப்பு ரீதியாகவும். தனிப்பட்டவர்கள் உண்டியல் சேமிப்பு முறையிலும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

பலகத்துறை “ஜலால்தீன் பவுண்டேஷன்” அமைப்பின் சார்பில் இரண்டு லட்சம் ரூபாவுக்கான காசோலை ஒன்று கடந்த 03.02.2026 அன்று பாடசாலை காரியாலயத்தில் பாடசாலை உதவி அதிபர் எம்.எல்.எம்.லுதுபி சேர் அவர்களிடம்
கையளிக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படத்தை மேலே காணலாம்.

படத்தில். “ஜெலால்தீன் பவுண்டேஷன்” அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரான. எஸ்.ஏ.எம். பௌஸான், பொருளாளர் எம். ஜே. எம். சகாப்தீன் ஆசிரியர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளரும் காணிக் கொள்வனவுச் சங்கத்தின் பொருளாலருமான ஹஸன் ஆகியோரும் காணப் படுகின்றனர்.

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *