உள்நாடு

சீனன் கோட்டையில் சிறப்பாக நடைபெற்ற ஷாதுலிய்யா தரீக்கா கலீபாக்கள் ஒன்று கூடல் நிகழ்வு; பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது

ஷாதுலிய்யா தரீக்காவின் முன்னேற்றம், வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் சம்பந்தமான முக்கிய கலந்துரையாடல் 9ம் திகதி (09/02/2026) பேருவலை சீனங் கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீட பாஸிய்யா மண்டபத்தில் இலங்கைக்கான கலீபதுல் குலபாவும், காலி அலிய்யா அரபுக் கல்லூரி பணிப்பாளருமான அல்ஹாஜ் மெளலவி முஹம்மத் ஸுஹூர் (பாரி) தலைமையில் நடைபெற்றது.

நாட்டிலுள்ள கலீபாக்கள் அனைவரும் இதில் கலந்து சிறப்பித்தோடு தத்தமது பகுதிகளில் ஷாதுலிய்யா தரீக்காவின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். கூட்ட இறுதியில் ஷாதுலிய்யா தரீக்காவின் முன்னேற்றம் கருதி பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டமை விஷேட அம்சமாகும்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும், அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் மெளலவி இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) வரவேற்ப்புரை நிக‌ழ்த்தினார். இதில் ஓர் அங்கமாக சீனங்கோட்டை பகுதியிலுள்ள ரயீஸுல் முகத்தமீன்கள், முகத்தமூன்கள், இக்வான்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது.

(பேருவலை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *