காணாமல் போயிருந்த மத்ரஸா மாணவர் நஸ்மி அஹமட் கிடைத்துவிட்டார்
காணாமல் போயிருந்த வவுனியா மாவட்டம் புதிய சாளம்பைக் குளத்தை சேர்ந்த மத்ரஸா மாணவர் நஸ்மி அஹமட் கிடைத்துவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) காலை 11 மணிமுதல் காணாமல் போயிருந்த நஸ்மி அஹமட் இன்று (9) காலை கிடைத்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
(தகவல்: சப்ரான் பதுர்தீன்)
