உள்நாடு

மீன்பிடி சமூகத்தினருக்கான அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி திட்டத்தை நடாத்திய கடற்படை

இலங்கை கடற்படையால் மீனவ சமூகத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காப்பு (Basic Life Support – BLS) பயிற்சி திட்டம் அண்மையில் திருகோணமலையில் உள்ள கோட்பே மீன்வளத் துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, ‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ் சமூக உறுப்பினர்களின் சமூக வலுவூட்டலின் கீழ், கிழக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், திருகோணமலையில் உள்ள கோட் பே மீன்வள துறைமுகத்தில் உள்ள மீனவ சமூகத்திற்கு கடலில் அவசரநிலை ஏற்பட்டால் அடிப்படை முதலுதவி வழங்குவது உள்ளிட்ட நல்ல சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய அவசரநிலையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *