தேசியத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்த வாழைச்சேனை ஹைராத் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸா மாணவனுக்கு பள்ளிவாயலில் பாராட்டு

எச்.ஆர்.எப்.பவுன்டேசன், பஜ்ர் கவுன்சில், கொலன்னாவ ஜும்ஆ பள்ளிவாயல் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த அல் குர்ஆன் மனனப்போட்டியில் வாழைச்சேனை ஹைராத் பகுதி நேர குர்ஆன் மத்ரஸா சார்பாக கலந்து கொண்ட மாணவன் அல் ஹாபிழ் எம்.எஸ்.எம்.ஸாதீக் பத்து ஜுஸ்உ போட்டியில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப்பெற்று ஐந்து லட்சம் ரூபா (500,000/=) பணப்பரிசும் நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
இம்மாணவர் பிரதேசத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்தமையை முன்னிட்டு மாணவனுக்கான பாராட்டு நிகழ்வு இன்று (06.02.2026) வாழைச்சேனை ஹைராத் ஜும்ஆ பள்ளிவாயலில் வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் அதன் கீழியங்கும் எட்டு பள்ளிவாயல்களின் தலைவரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வாழைச்சேனை அந்நஹ்ஜா அல் இஸ்லாமிய்யா அரபுக்கல்லூரி அதிபர் எம்.ஏ.ரஹ்மதுல்லாஹ் (பலாஹி) மற்றும் பள்ளிவாயல் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.
ஹைராத் பகுதி நேர குர்ஆன் மத்ரஸாவில் ஒரு வருடத்திற்குள் முழுக்குர்ஆனையும் மனனம் செய்து முடித்த முதலாவது ஹாபிழ் இவர் என்பதும்குறிப்பிடத்தக்கது.


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
