உள்நாடு

சோசியல் டிவியினால் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்..!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோசியல் டிவி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து, சிலோன் கிறீன் லைப் Plantation மற்றும் ZABCO நிறுவனத்தின் அனுசரணையில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

சோசியல் டிவி ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் என்.எம்.முஹம்மட் சிராஜின் நெறிப்படுத்தலில் சோசியல் டிவி ஊடக வலையமைப்பின் ஆலோசகரும், அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 241 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேட் கமாண்டர் ஆர்.எஸ்.சி.திசாநாயக்க, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ. அஹமட் அப்கர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பணிப்பாளர் டபிள்யூ.ஏ.கங்கா சாகரிக்கா, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம்.வபா, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் துறைத் தலைவர் ஏ.எம்.றியாஸ் அகமட், அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ், அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ்,
அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக் அலி, Ceylon Green Life Plantation நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் எம்.மதன், அஷ்ரப் ஞாபகாத்த வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி எஸ். மருதராஜன், சோசியல் டிவி ஊடக வலையமைப்பின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சோசியல் டிவி ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பதிவு மற்றும் வழிகாட்டி குழுவினர், ஊடகப் பிரிவு மற்றும் தன்னார்வ இளைஞர்கள் ஆகியோர்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். அவர்களது தன்னலமற்ற சேவை அனைவரினாலும் பாராட்டை பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *